ரஜினி அரசியலுக்கு வந்து பின்னி பெடலெடுப்பார்: லதா ரஜினிகாந்த் ஆருடம்

புதன், 21 நவம்பர் 2018 (12:09 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்து தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக விரைவில் அரசியலில் குதிக்க உள்ளேன்,  அரசியலில் குதிக்க உள்ளேன் என கூறிவந்த ரஜினிகாந்த் கடந்த வருடம் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எந்த தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. அவரது பட ரிலீசில் போது மட்டுமே இவர் அரசியலை பற்றி பேசுகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பேசிய அவர் அரசியலில் நுழைய அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும், விரைவில் கட்சி தொடங்கவிருப்பதாகவும் பழைய டைலாக்கை பேசினார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினினியின் மனைவி லதாவிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அவர், எனது கணவர் ரஜினி அரசியலில் குதித்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்வார். மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்