சென்னையின் முக்கிய பகுதிகளில் நல்ல மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:19 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
 
குறிப்பாக வளசரவாக்கம், போரூர், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையின் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராமாபுரம், கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது 
 
சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மழையை சந்தோஷமாக அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்