புதுவை கவர்னர் தமிழிசை ட்விட்டர் பக்கம் ஹேக்.. மீட்க போராடும் தொழில்நுட்ப வல்லுனர்கள்..!

Siva

புதன், 17 ஜனவரி 2024 (07:07 IST)
புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சமூக வலைதளமான ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கணக்கை மீட்க தொழில்நுட்ப வல்லுநர்கள் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
 தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்கள் மத்திய அரசின் நல திட்டங்களை அவர் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறல்! 24 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கைது!
 
இந்த நிலையில் திடீரென அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்க முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு மாநில கவர்னரின் ட்விட்டர் பக்கமே ஹேக் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய ட்விட்டர் கணக்கு மீட்கப்படும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்