5 மாதத்திற்கு பிறகு... தமிழக மற்றும் சென்னை வாசிகள் ஹேப்பி அண்ணாச்சி!!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (08:04 IST)
கொரோனா காரணமாக 5 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பேருந்து, பயணிகள் ரயில், மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் முழுவதும் பேருந்து இரயில்களில் உள்பட அனைத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஓரளவு தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் ஓடியது. 
 
இந்நிலையில் இன்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்  பேருந்து, மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. ஆம், சென்னை சென்ட்ரலில் இருந்து  ஜூன் மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.10 மணி முதல் ரயில் சேவை துவங்கியது. 
 
அதேபோல, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீலநிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது, இதனை துவங்கி வைத்த அமைச்சர் எம்.சி.சம்பத் பயணிகளுடன் பயணித்தார். 
 
இதுமட்டுமின்றி சென்னையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மட்டும் 400 பேருந்துகள் இயங்கவுள்ளது. 50% பேருந்து நிறம்பியதும் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்