சென்னையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்!

சனி, 23 ஜனவரி 2021 (08:44 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. 

 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்ததுதான் என்பதும் இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்காததன் காரணமாக இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்