இந்தியாவை உலுக்கும் பஞ்சமி நிலம் : பஞ்சமி நிலம் என்றால் என்ன ? அசுரனின் தாக்கமா ?

வியாழன், 17 அக்டோபர் 2019 (17:17 IST)
பூ.மாணிக்கவாசம் என்ற இயற்பெயர் பூமணி கடந்த 2014 ஆம் ஆண்டு , அஞ்ஞாடி என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி பரிசு வென்று தமிழ் இலக்கியத் தளத்துக்கு பெருமை சேர்த்தார். இவரது ‘வெக்கை’ என்ற நாவலைத்தான் தமிழ்சினிமாவில் உள்ள இளம் இயகுநர்களில் மிகவும் கலை நேர்த்தியான மற்றும் எதார்த்தமான படைப்பாளியாக அறியப்படுகிற வெற்றிமாறன்,  தனுஸ் நடிப்பில் அசத்தலான ‘அசுரன் ; என்ற படமாக எடுத்துள்ளார்.
இப்படத்தின் கதை அம்சமாக  விளங்குவது பஞ்சமி நிலத்தைப்பற்றியதாக உள்ளது. 
 
இதைப் பற்றி முக ஸ்டாலின் தனது டுவிட்ட பக்கத்தில், அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பூமணி ’வெக்கை’ என்ற இலக்கிய  நாவலாக்கிய படைப்பை, வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி திரைமொழிக் காவியமாக்கி உள்ளனர்.
 
ஒட்டுமொத்த தமிழகத்தையே புறட்டிப்போடும் அளவுக்கு இந்த பஞ்சமி நிலத்தைப் பற்றிய நிஜங்கள் இக்கதையில் உலவுவதாகவும் பல பேச்சுகள் அடிபடுகிறது.
உண்மையில் இந்த பஞ்சமி நிலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று என்றே கூறலாம். அதிலும் முக்கியாமாக 200 ஆண்டுகளாக வரலாற்றை தற்போது மீள்பார்வை செய்வது போல இந்த திரைப்படம் தனிப்பட்ட சிலருடைய வணிக வசூலுக்கு அப்பாற்பட்டு ஒரு ஜனரஞ்சகமாக, தமிழகம் மற்றும் இந்தியாவிலுள்ள   எதார்த்த  அரசியலையும் அதன் களத்தையும், வெகுஜனத்தின் அப்பாவித்தனத்தையும் ஏமாற்றத்தையும்  அப்பட்டமாக தோலுரித்துக்காட்டுவதாகவும் கருதலாம்.
 
பஞ்சமி நிலம் என்றால் என்ன ?
கடந்த 1892 ஆம் ஆண்டு  ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் பஞ்சமி நிலம் பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பஞ்சமி நிலச்சட்டப்படி இந்தியா முழுவதும் உள்ள  2.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தலித் மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இலவசமாக அரசால் வழங்கப்பட்டதாகவும் ஒரு வரலாற்றுத் தகவல் உள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள பட்டியலின மக்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டது. இந்த பஞ்சமி நிலச் சட்டத்தின்படி இந்த நிலத்தை 10 ஆண்டுகளுக்கு வேறு வகுப்பினர் யாருக்கும் விற்கவோ, தானம் கொடுக்கவோ, கூடாது. அதேசமயம் தங்கள் வகுப்பினருக்கு தானம் கொடுக்கவும் , அடமானம் வைக்கவும் , குத்தைக்கு விடவும் உரிமை உள்ளதாக அந்தச் சட்டத்தில் கூறியுள்ளது. 
 
ஆனால் காலப்போக்கில் இந்தப் பட்டியலின மக்கள் தங்களுக்கு அரசால்  வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை  வேற்று சமூகத்தினருக்கு விற்றுள்ளனர். அதை பல்வேறு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அக்காலத்தில் தீண்டாமை பிரச்சனையால், சாதிபாகுபாடினால் பட்டியலின மக்கள் ஒதுக்கி வைக்கப்பட போது, அவர்களின்  பொருளாதார முன்னேற்றத்திற்காக 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட வேளாண் விளை நிலங்கள் காலப்போக்கில் வெறும் பணத்திற்காக விற்று தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர் அம்மக்கள் (பட்டியலின மக்கள் ).
 
அதேசமயம் சில பணம் பலம் படைந்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோர் அப்பாவி பட்டியலின மக்களை மிரட்டி அவர்களை அடிமைகளாக்கி அவர்களிடம் இருந்த வேளாண் நிலத்தை ஏமாற்றி அபகரித்துள்ளாதகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
அந்த வகையில்  பார்த்தால் பட்டியலினத்தவர்கள் பஞ்சமி நிலத்தை வேறு வகுப்பினருக்கு கொடுக்ககூடாது என பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த சட்டம் அப்போதும் அதற்குப் பிந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதாவது சுதந்திர இந்தியா காலக்கட்டத்திலும் இந்த சட்டத்தை ஏன் மீறினார்கள் ? அப்படி மீறி அராஜகம் செய்து பஞ்சமி நிலங்களை அபகரித்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விகள் ஆயிரம் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளது. 
காந்தியடிகளே போற்றிய வினோபாவே பூமிதான இயக்கத்தை ஆரம்பித்து பல லட்சக்கணக்கான பட்டியலின மக்களுக்குக் கொடுத்தார். காலப்போக்கில் பிரிட்டிசார் கொடுத்த பஞ்சமி நிலங்கள் போல் வினோபாவே கொடுத்த நிலங்களும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி இருக்குமா என்பதை அரசு ஆய்வு செய்தால் தான் இந்த நாட்டில் நிலவுகிற  உண்மைத்தன்மை ஒரு குழந்தை போல் புத்துயிர் பெறும்,
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்