ஓபிஎஸ் வரவேற்பில் ஒரேயொரு அமைச்சர் – ஆதரவாளர்கள் அதிருப்தி !

செவ்வாய், 19 நவம்பர் 2019 (13:34 IST)
அமெரிக்கப்பயணம் சென்று தமிழகம் திரும்பிய துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ வரவேற்க விமான நிலையத்தில் ஒரே  ஒரு அமைச்சர் மட்டுமே வந்ததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

10 நாட்கள் அமெரிக்க பயணம் சென்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு தமிழகம் திரும்பினார். அவரை  சென்னை விமான நிலையத்தில் வரவேற்க வந்த கூட்டத்தில் அவரது  ஆதரவாளர்களே அதிகமாக இருந்தனர். கட்சி பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் என்று பார்த்தால் மாஃபா பாண்டியராஜன் மட்டும்தான் வந்திருந்தார். இத்தனைக்கும் பொதுக்குழுவுக்காக அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் இருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று திரும்பியபோது அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கூடி பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தனர். இந்நிலையில் அதேபோல வரவேற்பு ஓபிஎஸ்-க்கும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலிடத்து உத்தரவுக் காரணமாகதான் அமைச்சர்கள் அதிமுகவுக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்