ஓபிஎஸ் தர்மயுத்தமும் அழகிரியின் ஆதங்கயுத்தமும்

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (09:50 IST)
கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிட கட்சிகளின் தலைவர்கள் மறையும்போது அக்கட்சிகள் இரண்டாக உடைவது என்பது மறுக்க முடியாத வரலாறாக இருந்து வருகிறது.
 
அறிஞர் அண்ணா இறந்தபோது கருணாநிதியா? நெடுஞ்செழியனா? என்ற பிரச்சனை வந்தது. ஆனால் கருணாநிதியின் புத்திசாலித்தனம் மற்றும் எம்ஜிஆரின் ஆதரவு காரணமாக கருணாநிதி கட்சியின் தலைமை பொறுப்பையும், முதல்வர் பதவியையும் ஏற்றார்.
 
அதேபோல் எம்ஜிஆர் இறந்தபோது ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதன்பின்னர் ஜெயலலிதா தனது செல்வாக்கை நிரூபித்து அதிமுகவை கைப்பற்றினார்
 
பின்னர் ஜெயலலிதா மறைந்தபோது சசிகலாவின் பிடியில் அதிமுக சென்றது. ஆனால் ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி கட்சியை இரண்டாக்கினார். இதன்பின்னர் சசிகலா சிறைக்கு செல்ல, கட்சி ஓபிஎஸ்-ஈபிஎஸ் வசம் சென்றது.
 
இந்த நிலையில் தான் கருணாநிதியின் மறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது திமுகவின் பெரும்பாலான தலைவர்கள், ஸ்டாலின் பக்கம் நிற்க, அழகிரி ஆதங்க யுத்தத்தை தொடங்கியுள்ளார். இந்த ஆதங்கயுத்தம் திமுகவை இரண்டாக்குமா? அல்லது அழகிரி சமாதானப்படுத்தப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்