வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி பண மோசடி - தி.மு.க பிரமுகர் கைது

செவ்வாய், 11 ஜூன் 2019 (20:13 IST)
வங்கிக்கடன் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர்., அன்பழகன், கரூர் மாவட்ட தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளரும், தி.மு.க பிரமுகரான இவர்., அதே பகுதியில் வசித்து வரும் நிலையில்., இதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், யுவராஜ் , காமராஜ் , மனோகர் , சந்திரசேகர், ஜெயவீரராஜீசுந்தரம் மற்றும் சக்திவேல் உள்ளிட்ட பலரிடம் வங்கியில் கடன் வாங்கித்தருவதாகவும், அரசு வேலை வாங்கிதருவதாகவும். மேலும் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகவும் மேலும் மாவட்ட தொழில் மையத்தில் மானியத்துடன் கூடிய லோன் பெற்று தருவதாகவும் கூறி பலரிடம் பணத்தை பெற்று ஏமாற்றி பல வருடங்களாக மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் கொடுத்த பணத்தை பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர் அதற்க்கு அன்பழகன் தான் ஒரு அரசியல்வாதி என்றும் ஆங்காங்கே கூறி வருவதோடு., பணம் கொடுத்தவர்களை மிரட்டியுள்ளார். மேலும்  இவர் வெளிநாட்டிற்க்கு செல்வதாக கிடைத்த தகவலையடுத்து அன்பழகனின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை தப்பிச்செல்ல விடாமல் தடுத்து நிருத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் புகார் மனு அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்