தேனி பால் சொசைட்டி வழக்கு: ஓ.ராஜா பதவி நியமனம் ரத்து!

வியாழன், 23 ஜனவரி 2020 (12:06 IST)
தேனி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்பான வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவின் பதவி நியமனத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பால் உற்பத்தியாளர் சங்கத்திலிருந்து கடந்த 2018ம் ஆண்டு தேனி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பிரித்து தனியாக உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக ஓ.ராஜா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆவின் விதிமுறைகளின்படி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் தற்போதைய உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆவின் விதிமுறைப்படி தேனி பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாததால் அவர்களின் பதவி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தற்போதைய உறுப்பினர்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஆவின் ஆணையர் விதிகளை பின்பற்றி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒரு குழுவை அமைக்கலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்