கட்சி பிரச்சனையை ஆட்சி வரை கொண்டு வரும் ஓபிஎஸ்??

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:54 IST)
கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என தகவல். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை அமலில் இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.  
 
மேலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் பெற்றோர்களின் விருப்பத்தின் பெயரில வரலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு அக்டோபர் மாதம் சென்னையில் புறநகர் ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  
 
இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபந்தனைகளுடன் இன்று (செப் 29 ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்துவரும் கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர்வேட்பாளர் யார் என்ற பிரச்சனை அதிமுகவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஓபிஎஸ் இதில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. 
 
அதோடு துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்