திரையரங்குகள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (18:52 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். என்னதான் ஓடிடியில் படத்தை வீட்டில் உட்கார்ந்து பார்த்தாலும் திரையரங்குகளில் ரசிகர்களோடு ரசிகர்களாக உட்கார்ந்து பார்க்கும் அனுபவம் வேறு எதிலும் இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது
 
ஆனால் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் ’தற்போது திரையரங்குகளில் திறக்க வாய்ப்பு இல்லை’ என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மக்கள் அதிக அளவில் திரையரங்குகளில் கூடுவார்கள் என்பதால் திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க அனுமதிக்க முடியாது என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க எந்தவித சட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களின் இந்த பேட்டியை வைத்து திரையரங்குகள் இந்த ஆண்டு திறக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்