மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பிளான் பி என்ன? பாஜக தலைமை தீவிர ஆலோசனை..!

Mahendran

புதன், 10 ஏப்ரல் 2024 (14:01 IST)
பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று ஒரு சில கருத்து கணிப்புகள்  தெரிவித்தாலும் உளவுத்துறை 200 முதல் 220 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கூறியதாகவும் செய்திகள் கசிந்து உள்ளது. 
 
இந்த நிலையில் ஒருவேளை பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் ஒரு சில கட்சிகளை அழைத்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவ்வாறு கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் வேட்பாளர் மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 
எதிர்க்கட்சி தரப்பிலிருந்து வரும் அரசியல் கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டால் பிரதமர் வேட்பாளரை மாற்ற கோரிக்கை வைக்கும் என்றும் அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நிதின் கட்காரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்றும் பாஜக தலைமை ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டே இந்த பிளான் இருந்ததாகவும் ஆனால் அப்போது பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்து விட்டதால் அந்த பிளானை அமல்படுத்த அவசியம் இல்லாமல் போய்விட்டது என்றும் ஒருவேளை 2024 தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் நிதின் கட்காரி தான் பிரதமர் வேட்பாளராக மாறுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக தனி மெஜாரிட்டி பெற்று விட்டால் மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்