செமஸ்டர் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு -அண்ணா பல்கலை

வியாழன், 7 டிசம்பர் 2023 (16:55 IST)
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செம்ஸ்டருக்கான புதிய அட்டவணையை இன்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில்  இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கடந்த 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. எனவே மறுதேதி விரையில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, செம்ஸ்டருக்கான புதிய அட்டவணையை இன்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

அதில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு  (2023) பிப்ரவரி மாதம் 17   ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்