உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; ரெட் அலர்ட் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம்!

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:14 IST)
வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடியே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மத்திய பிரதேசம் மற்றும் கோவாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடற்கரையோர மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழையே பெய்யும் என்றாலும் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்