அண்ணாமலை கூறிய அரசு வேலை விவகாரம்: பிடிஆர் பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

Siva

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (15:24 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு வேலை குறித்து பேசியதற்கு திமுகவினர் கேலி செய்து வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது சமூகவலைதளத்தில் கண்டித்து ஒரு பதிவு செய்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது:
 
ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்...
 
BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள்,  ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! 
 
அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா
 
 இந்த நிலையில் பிடிஆர் பதிவுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலை என்று அண்ணாமலை கூறவில்லை, இதுவரை எந்த குடும்பத்தில் ஒரு தலைமுறையினர் கூட அரசு வேலை இல்லாமல் இருந்தார்களோ, அந்த குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து அரசு வேலை வழங்கப்படும் என்றுதான் அண்ணாமலை கூறினார் 
 
ஆனால் வழக்கம் போல் திமுகவினர் இந்த கருத்தை திரித்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக கூறி வருகின்றனர் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்