ஸ்டெர்லைட் தீர்ப்பாவது தமிழக மக்களுக்கு சாதகமாக வருமா? இன்று முக்கிய உத்தரவு

புதன், 28 நவம்பர் 2018 (10:24 IST)
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விசாரணை இன்று தேசிய பசுமை தீர்ப்பயத்தில் நடைபெற உள்ளது.
 
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. இதில் அப்பாவி மக்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
 
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் சார்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இன்று இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க உள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை செல்லுபடியாகுமா அல்லது வழக்கம் போல் ஸ்டெர்லைட் ஆலை இதில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
ஏற்கனவே மேகதாது அணை விஷயத்தில் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்