விழுப்புரம் சிறுமி எரித்து கொலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

திங்கள், 11 மே 2020 (16:30 IST)
விழுப்புரம் சிறுமி எரித்து கொலை
இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக விழுப்புரம் சிறுமி கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர செய்த நிலையில் இதுகுறித்து தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் 7 நாள்களுக்குள் இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்கவும் இவ்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பதிவு செய்த வழக்கின் காரணமாக இந்த வழக்கு சுறுசுறுப்பாக விசாரணை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை ஏழு நாட்களில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் மாவட்ட ஆட்சியரால் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதன்பின்னர் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்