டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்க முடியாது; அரசியலில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்

சனி, 17 மார்ச் 2018 (21:24 IST)
டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் தனியாக அணி தொடங்கியுள்ளதை அடுத்து அவரது அணியிலிருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளர்.

 
டிடிவி தினகரன் நேற்று முந்தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்யுள்ள நிலையில் அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், தான் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அண்ணாவும் திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இல்லை. அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை. டிடிவி தினகரனின் அநிநாயத்தை என்னால் தாங்க முடியாது. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது. அரசியலில் இருந்தும் நான் விலகுகிறேன். எந்த கட்சியிலும் நான் இல்லை என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்