இப்போவும் எப்போவும் தனித்துதான் போட்டி! – வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னதாகவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை கூட்டணி அமைக்குமா? தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் பல கட்சிகள் கூட்டணியே உறுதியாகாத நிலையில் முதல் ஆளாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்த 35 தொகுதிகளும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்