அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் - ஸ்டாலின் ஆதங்கம்!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:04 IST)
அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

 
9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு கிடையாது என்றும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்றும் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.
 
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது என விமர்சித்துள்ளார். அதோடு, தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் அதிமுக ஆட்சி நிர்மூலமாக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்