பேசி தீத்துக்கலாம்.. சூர்யா - ஜோதிகா விஷயத்தில் பஞ்சாயத்துக்கு வந்த அரசு!!

ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (16:05 IST)
சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள் வெளியிடப்படாது என கூறப்படும் நிலையில் இதை பேசி தீர்த்து வைக்க அரசு முன்வந்துள்ளது. 
 
ஊரடங்கு காரணமான வெளியாகமல் இருக்கும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா நடிக்கும் திரைப்படங்கள், 2டி தயாரிப்பில் வரும் படம் என எதையும் திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தனர். இதனால் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது. 
 
இது குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை.  இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன்.
 
இரு தரப்பினரும் அமர்ந்து பேச வேண்டிய பிரச்னை என்பதால் இரு தரப்பும் பேசி தீர்க்க அரசு உதவி செய்யும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்