விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (15:15 IST)
தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டும் விழாவிற்கு கலந்துகொள்ள தமிழக மின் துறை அமைச்சர் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திருச்செங்கோடு - ராசிபுரம் சாலையில் தென்னம்பாளையம் என்ற இடத்தில் கார் விபத்து ஏற்பட்டிருப்பதைக் கண்டு காரில் இருந்து இறங்கி, விபத்தில் சிக்கிய பெண்ணையும் குழந்தையையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்