50 பெண்களுடன் திருமணம்...முதலிரவுக்குப் பின் நகை, பணத்துடன் ஓட்டம்... கல்யாண மன்னன் கைது!

சனி, 10 ஜூன் 2023 (18:02 IST)
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் தபேஷ்குமார் (55வயது).  இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், திருமணமான 8 ஆண்டுகளில்  தன் மனைவி, மகள்களை விட்டு விட்டு பிரிந்து சென்றார்.

அதன்பின்னர், கர்நாடக மாநிலத்திற்குச் சென்ற அவர் ஒரு வேலைவாய்ப்பு நிறுவத்தை துவங்கி, பலரை ஏமாற்றியுள்ளார்.

பின்னர் ஷாதி மேட்டரிமோனி இணையம் மூலம்  கணவனை இழந்த பெண்கள், ஏற்கனவே திருமணமான பெண்களை குறிவைத்து ஏமாற்றி, கடந்த 20 ஆண்டுகளில் திருமணம் செய்துள்ளார். முதலிரவு முடிந்த பின், அவர்களிடம் இருந்து  நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு ஓடிவிட்டார்.

மேற்கு வங்காளம், மராட்டியம், மணிப்பூர், திரிபுரா,  உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய பல மா நிலங்களில்  பல பெண்களை ஏமாற்றிக் கொள்ளையடித்துடன், வன்முறை, மோசடி புகார்களில் சிக்கி சிறை சென்றுள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்து, மீண்டும் மோசடியில் இறங்கியுள்ளார். இந்த நிலையில், பெண்கள் அவர் மீது புகார் கூறியதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த ஹரியானா போலீசார் விசாரணை நடத்தி, ஒடிஷாவில் தலைமறைவாக இருந்த தபேஷை குருகிராம் காவல்துறை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்