விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்- அண்ணாமலை

வியாழன், 28 டிசம்பர் 2023 (20:56 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடலுக்கு,சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நாளை காலை  6  மணியில் இருந்து, மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது.

கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, பூந்தமல்லி சாலை வழியயாக தேமுதிக தலைமை அலுவகம் அடைந்து இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமைகழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு மிகவும் கடினப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

உயிரிழந்த விஜயகாந்த் உடலை பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட காரணமே விஜயகாந்த். நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என  சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்