தத்தளிக்கும் தூங்கா நகரம்: 4 மணி நேர மழையையே தாங்காத சோகம்!!

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:39 IST)
மதுரையில் 4 மணி நேரமாக நீடித்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த நீரில் மூழ்கிய வாகனங்கள்.
 
மதுரை திருமங்கலம், மேலூர், சோழவந்தான், திருப்பரங்குன்றம், சிலைமான் மற்றும் மாநகர பகுதிகளான கோரிப்பாளையம், முனிச்சாலை, ஆனையூர், சிம்மக்கல்,பெரியார் பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக பரவலான மழை பெய்தது. 
 
இதன் காரணமாக மதுரை ரயில்வே நிலையம் சாலை மற்றும் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கிநின்றதால் வாகன நிறுத்தங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்கள் மிதந்தன. 
 
மேலும் சாலைகள் மழைநீரால் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மலையில் மழையின் காரணமாக திடிரென நீர் வீழ்ச்சி போன்று காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுமகிழ்ந்தனர். 
 
மழைநீரில் வாகனங்கள் மூழ்கியதால் ஏராளமான வாகனங்கள் பழுதடைந்த நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்