தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக் கொலை

வியாழன், 2 நவம்பர் 2023 (21:12 IST)
தூத்துக்குடியில்  காதல் ஜோடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம்(24), கார்த்திகா (20) இருவரும் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும்  ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் குடும்பத்தினரான அவரது தந்தை உள்ளிட்ட 5 பேர்   இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகிறது.

இந்த கொடூர கொலை தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளானர். இதுகுறித்து  மேலும் விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்