தலைமை செயலகத்தில் தொடங்கியது ஆலோசனை: லாக்டவுன் நீட்டிப்பா?

திங்கள், 29 ஜூன் 2020 (11:01 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதை அடைத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவர் குழுவினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார் 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் முதல்வர் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளை அதிகப்படுத்துவதா? என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஐந்து கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது என்பதும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் முழு முழு ஊரடங்கு அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தளர்வுகளுடன் கூடிய ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது என்பதால், ஜூலை 31 வரை ஊரடங்கை நீடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும், சென்னை உள்பட கொரோனா தொற்று அதிகம் இருக்கும் ஒருசில மாவட்டங்களுக்கு மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன 
 
இருப்பினும் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்னும் சிறிது நேரத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த அறிவிப்பை தெரிந்துகொள்ள பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்