நீலகிரியில் நேருக்கு நேர் மோதும் ஆ ராசா - எல் முருகன்.. யாருக்கு வெற்றி?

Siva

வியாழன், 21 மார்ச் 2024 (19:52 IST)
நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீண்டும் திமுக சார்பில் போட்டியிட உள்ள நிலையில் பாஜக சார்பில் அவரை எதிர்த்து எல் முருகன் போட்டியிட இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஆ. ராசா வெற்றி பெற்றார் என்பதும் 2009 ஆம் ஆண்டு 2014ஆம் ஆண்டிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ச்சியாக மூன்று முறை அந்த தொகுதியில் இருந்து அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான்காவது முறையாக மீண்டும் திமுக சார்பில் ஆ. ராசா களமிறங்க இருக்கும் நிலையில் முதல் முறையாக எல் முருகன் நாடாளுமன்றத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். மத்திய இணை அமைச்சர் ஆக இருக்கும் எல் முருகன் இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் கேபினட் மினிஸ்டர் ஆவார் என்ற வாக்குறுதி பாஜக சார்பில் இருந்து தரப்படும் என்பதால் அவர் ஆ ராசாவுக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அண்ணாமலை இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து எல் முருகனை வெற்றி பெற வைக்க முயற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த தொகுதியில் கடும் போட்டி இருக்கிறது என்றும் வெற்றியை கணிக்க முடியவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்