ரஜினி ஆதரவு எனக்குத்தான், நான் கேட்க வேண்டிய அவசியமே இல்லை: குஷ்பு

வெள்ளி, 19 மார்ச் 2021 (07:11 IST)
ரஜினியிடம் நான் நேரில் போய் ஆதரவு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவரது ஆதரவு எனக்கு தான் என்றும் நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தற்போது தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்த போது ரஜினியின் ஆதரவை கேட்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு 'ரஜினி சார் அவர்களின் ஆதரவை நான் கேட்க வேண்டிய அவசியமே இல்லை, அவருடைய ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என்று கூறினார் 
 
சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் கூறிய ரஜினிகாந்த் இதுவரை எந்த வேட்பாளருக்கும் எந்த கட்சிக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் ரஜினியின் ஆதரவு எனக்கு எப்பொழுதும் உண்டு என்று குஷ்பு கூறியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்