சசிகலாவுக்கு முதல் பக்க செய்தியா…. குஷ்புவின் ஜாடை மாடை டிவீட்!

வியாழன், 21 ஜனவரி 2021 (13:36 IST)
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவின் உடல்நிலை நலிவடைந்துள்ள நிலையில் அதுபற்றி ஊடகங்களில் அதிகளவில் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது சம்மந்தமாக ஊடகங்களில் தலைப்பு செய்திகள் மற்றும் முதல் பக்க செய்திகள் வெளியான நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ‘ஊழல்வாதியாக, நட்பைப் பயன்படுத்தி மோசடிகள் செய்தவரான, தவறான வழியில் சொத்து சேர்த்து அதற்காக தண்டனையாக சிறையில் இருப்பவர்களுக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏன் முதல் பக்கங்களில் செய்தி வெளியிடுகின்றன?’ என சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்