கோயம்பேடு பிரச்சனை.. விடுமுறை அறிவித்த வியாபாரிகள்: மக்கள் நிலை என்ன??

செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (15:18 IST)
சிறு மொத்த வியாபாரிகள் ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை கடைகளுக்கு விடுமுறை அறிவித்தனர். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.  
 
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரண்டு வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் சந்தையை மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடுகளில் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதன்படி கோயம்பேடு சந்தையில் இயங்கி வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு மொத்த வியாபாரிகள் கடைகளை இரண்டாகப் பிரித்து இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரிகளுக்கு கோயம்பேட்டிலும், சிறு மொத்த வியாபாரிகளுக்கு அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்கள், மைதானங்களில் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத சிறு மொத்த வியாபாரிகள் ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை கடைகளுக்கு விடுமுறை அறிவித்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்