ஈபிஎஸ் உடன் நடிகை கஸ்தூரி திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

Siva

புதன், 28 பிப்ரவரி 2024 (06:34 IST)
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகை கஸ்தூரி அவருடைய வீட்டில் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது அரசியல் கட்சிகளில் இணைந்து தங்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
சமீபத்தில் கூட நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் இன்னும் சில பிரபலங்களும் சில அரசியல் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவருடைய வீட்டில் நடிகை கஸ்தூரி சந்தித்தார். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ் சத்யன் உள்ளிட்டவர்கள் இருந்ததாகவும் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
நடிகை கஸ்தூரி ஏற்கனவே அதிமுக ஆதரவாளராக தொலைக்காட்சியில் பேசி வரும் நிலையில் அவர் அதிமுகவில் இணைவாரா? அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அதிமுகவின் முக்கிய நிர்வாகி பதவி அவருக்கு கொடுக்கப்படுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்