கஜா புயலால் கதறும் கரூர் மக்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை!!!

ஞாயிறு, 18 நவம்பர் 2018 (16:19 IST)
கரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பல்லாயிரம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான வாழைகள் முற்றிலும் சாய்ந்தன. 
நெல் பயிர்கள் மூழ்கியதல் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர். உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர் 
 
கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதிகளான மருதூர், பரளி, கல்லுப்பட்டி, கருங்கலாப்பள்ளி, வளையப்பட்டி, தண்ணீர்பள்ளி, வதியம், கண்டியூர், கோட்டமேடு மற்றும் மைலாடி பகுதியில் வாழை மரங்கள் காற்றில் முற்றிலும் முறிந்தும் வாழைத்தார்கள் அனைத்தும் சேதமானது. புயல் பாதிக்கப்பட்டு பலமணிநேரங்கள் பிறகும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட வில்லை எனவும், பாதிக்கப்பட்ட மக்களிடம் இழப்பீடுகள் குறித்து எதுவும் பேசவில்லை எனவும் அவர்களுக்கான இழப்பீடு தொகையினை விரைவாக வழங்கவேண்டும் எனவும், மேலும் புயல் பாதித்த வாழை மற்றும் பயிர்கள் எந்தவிதத்திலும் பயன்தராத நிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பயிர் சாகுபடிக்காக பல லட்சம் ரூபாய் கடன் பெற்று பயிரிடப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக பெரும் நஷ்டத்தை தந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் லட்சக்கணக்கான வாழைமரங்கள் பயிரிடப்பட்டு அனைத்தும் சேதம்அடைந்துள்ளது. கடந்த வருடம் முழுவதுமாக வறட்சி நிலவிவந்தது பின்பு இந்தவருடம் மழைவந்தும் பயனில்லாமல் விவசாய பயிர்கள் புயலால் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து விவசாயிகள் வேளாண்சாகுபடியில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
 
இந்நேரத்தில் விவசாய கடனை திரும்ப செலுத்தும்படி வங்கிகளிலிருந்து மஞ்சள் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது இதற்கு அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதோடு கடனையும் தள்ளுபடி செய்ய வழிவகை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், அரசு தரப்பிலிருந்து இதற்கான நடவடிக்கை முழுமையாக எடுக்கப்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். 
 
மேலும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளதை மின்ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆங்காங்கே அரசு அதிகாரிகள் ஒருசில இடங்களில் பார்வையிட்டபோது பாதிக்கப்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும்., பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிக செலவு செய்தும் விவசாயம் செய்யப்பட்ட வாழை முழுவதும் சேதமானதற்கு உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

-சி. ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்