இரத்தத்தில் குறைந்த தட்டணுக்கள் : தீவிர சிகிச்சையில் கருணாநிதி : மருத்துவமனை அப்டேட்

திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (15:13 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு கடந்த 10 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயோதிகம், நுரையீரல் தொற்று, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக தொற்று, இரத்தத்தில் தொற்று என பல நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறார். எனினும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடல்நிலை சீரான நிலையில் இருந்து வந்தது.
 
இந்நிலையில்தான், கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். கடந்த 10 நாட்களாக மருத்துவமனைக்கு வராத கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை கருணாநிதியின் மூத்த மகன் தமிழரசு கோபாலபுரம் இல்லத்திலிருந்து அழைத்து வந்தார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதால், உடலில் தட்டணுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறதாம். இதனால், அவருக்கு அளிக்கப்படும் மருந்துகள் தாமதமாகவே வேலை செய்கிறது எனக்கூறப்படுகிறது. 
 
எனவே, அவருக்கு எதுபோன்ற சிகிச்சை அளிப்பது என மருத்துவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்