வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க நடவடிக்கையின் போது தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது- கார்த்திக் சிதம்பரம்!

J.Durai

செவ்வாய், 7 மே 2024 (07:50 IST)
சிவகங்கை   உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய கார்த்திக் சிதம்பரம்.....
 
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியவர்மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்தே இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம் என்றும் கூறினார்.
 
பாஜகவினர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைப்பது ஜனநாயக படுகொலை என்ற கார்த்தி சிதம்பரம்,நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கொலை சம்பவத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க கூடாது என்றும்,அது தனி நபர்கள் மீது உணர்ச்சிவசப்பட்டு நடைபெறும் குற்ற சம்பவம் என்றும் கூறியவர், இதனை அரசு தடுக்க முடியாது என்றார்.
 
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தென்னிந்தியாவில் அதிக இடங்களை பிடிக்கும் என்றவர், தமிழகத்தில் இந்திய கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்