காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம்… கொந்தளித்த கமல்ஹாசன்!

சனி, 23 ஜனவரி 2021 (13:02 IST)
யானை மீது டயரைக் கொளுத்தி வீசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் மாவநல்லா பகுதியில் ஊர்ப்பகுதிக்குள் வந்த காட்டு யானை மீது ஆசாமிகள் சிலர் தீ வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானையை விரட்ட டயரில் தீ வைத்து யானை மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் டயர் உருகி யானை மீது ஒட்டிக்கொண்டதால் யானைக்கு அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ’காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்