'டிஜிட்டல் இல்லங்கள்' திட்டம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

வியாழன், 31 டிசம்பர் 2020 (10:03 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. முதல்கட்டமாக மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலும், இரண்டாவது கட்டமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் தற்போது திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
மேலும் அவ்வப்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் ஆவேசமான கருத்துக்களையும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்த தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு ட்விட்டில் டிஜிட்டல் இல்லங்கள் குறித்த திட்டத்தை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை. கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில்(Lockdown)  ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது  'டிஜிட்டல் இல்லங்கள்' திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன். #இனி_நாம் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்