இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? கமல்ஹாசன் கேள்வி!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (22:02 IST)
புதுவையில் சமீபத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கவிழ்ந்த நிலையில் அவர் தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது 
 
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதுவரை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்வதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்