ஜெயலலிதாவின் நினைவு நாளுக்கு என்ன செய்வார் தினகரன்...? எதிர்பார்ப்பு எகிறுது

சனி, 1 டிசம்பர் 2018 (17:31 IST)
மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் அமமுக பெரும் திரளாய் கலந்து கொள்வோம் என தன் கட்சி தொண்டர்களுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வரும் டிசம்பர் 5 ஆம் நாள் மரியாதை செலுத்த அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டி.டி.வி. தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
அதில் தினகரன் கூறியுள்ளதாவது:
 
புரட்சித்தலைவரை அடியொற்றி தமழக அரசியல் உலகில்  தனது பயணத்தை தொடங்கிய அம்மா எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்தும் தம் மனவலிமையால் அத்துனை எதிர்ப்புகளையும் வெண்றவர் . அவர் சென்ற பாதையில் நாம் பணியை செய்வோம். அம்மா என்ற மந்திர சொல் எப்போது நம்மைஇயக்கிக்கொண்டிருக்கும்.
 
அம்மாவின் நினைவு நாளன்று டிசம்பர் காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து கழகத்தில் சார்பில் நடைபெறவுள்ள மௌன போராட்டத்தில் நாம் திரளாய் கலந்து கொண்டு அம்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்