பாஜக தலைவராகும் குப்பு ராமு ? - கமலாலயம் அதிர்ச்சி முடிவு !

திங்கள், 6 ஜனவரி 2020 (07:59 IST)
தமிழிசை சவுந்தர்ராஜன் வகித்துவந்த தமிழக பாஜக தலைவர் பொறுப்பை அடுத்ததாக குப்பு ராமு என்பவருக்கு வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு அந்த பொறுப்பு இன்னும் யாருக்கும் வழங்கப்படாமல் இருக்கிறது. அந்த பதவிக்கு ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் தமிழகத்தில் எதிர்மறையான பிம்பமே இருப்பதால் வேறு யாராவது நியமிக்கப்படலாம் எனவும் சொல்லப்பட்டது.

இது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் சென்னை பாஜக அலுவலகமான கமலாயலத்தில் நடந்தது. அதன் பிறகு குப்பு ராமு என்பவரைதான் அந்த பதவிக்கு தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர். விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தமிழக தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்