தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை வரும்?

sinoj

வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:45 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்ககூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதாவது:
 
இன்று தென் தமிழகம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
 
 5 ஆம் தேதி  முதல் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் அதிகபட்ச வெப்ப நிலை அடுத்த 5 நாட்களில் 2 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், தமிழக உள் மாவட்டங்களில் 39--11 டிகிரி செல்சியஸ் , உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பல இடங்கலில், 37-39 செல்சியஸும், கடலோரப் பகுதிகளில் 34- 37 டிக்ரி செல்சியஸும் இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்