வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 23ஆம் தேதி முதல் கனமழை!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:32 IST)
வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், அதனால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது
 
மேலும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வால் நவம்பர் 23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை,  கனமழை பெய்யக்கூடும் என்றும், ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்