ரஜினி- குருமூர்த்தி திடீர் சந்திப்பு: அரசியல் குறித்து ஆலோசனையா?

திங்கள், 2 நவம்பர் 2020 (07:38 IST)
ரஜினி- குருமூர்த்தி திடீர் சந்திப்பு: அரசியல் குறித்து ஆலோசனையா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் எழுதியதாக ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது என்பதும் அந்த கடிதம் தன்னுடைய கடிதம் இல்லை என்றாலும் அதில் உள்ள தனது உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துக்ளக் ஆசிரியரும் பாஜக பிரமுகருமான எஸ் குருமூர்த்தி நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் 
 
மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் இந்த சந்திப்பின்போது ரஜினியின் அரசியல் மற்றும் உடல்நிலை குறித்து எஸ் குருமூர்த்தி பேசியதாக தெரிகிறது. அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்த வேண்டுமானால் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்றும் ஒருவேளை உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டால் திமுகவுக்கு எதிராக இருக்கும் கூட்டணிக்கு அவர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ரஜினியிடம் எஸ் குருமூர்த்தி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ரஜினி என்ன முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்