கரும்பலகையில் அந்தரங்க படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் !

சனி, 16 நவம்பர் 2019 (15:44 IST)
நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் கரும்பலகையில் உடலுறவு சம்மந்தப்பட்ட படங்களை வரைந்த ஆசிரியரை மகளிர் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கலம்மன்புரம் கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் சுரேஷ் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஆனால் தனக்கு சம்மந்தம் இல்லாத உயிரியல் பாடம் நடத்துவதாக சொல்லி கரும்பலகையில் உடலுறவு சம்மந்தப்பட்ட படங்களை வரைந்து மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அவர் மீதான இந்த குற்றச்சாட்டை அடுத்து நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் மாணவிகள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஆசிரியர் சுரேஷ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்