உபத்திரம் பண்ணாம கப்சிப்னு இருங்க... ஜி.கே.வாசன் அட்வைஸ்!!

வியாழன், 2 ஏப்ரல் 2020 (14:12 IST)
கொரோனா வைரஸ் நோய்க்கு சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் இல்லை ஜி.கே.வாசன் பேச்சு. 
 
குறிப்பிட்ட மதத்தினர் தன கொரோனா பரவலுக்கு காரணம் என தேவையற்ற விவாதம் ஏற்பட்டு வரும் சூழலில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 
ஜி.கே.வாசன் பேசியதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதை அனைவரும் அறிவோம். கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி வருகின்ற வேளையில் உதவி செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை தவறான செய்திகளை பரப்பி உபத்திரம் செய்ய வேண்டாம்.
 
கொரோனா வைரஸ் நோய்க்கு சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் இல்லை. தமிழகம் முழுவதும் நாடோடிகளாக வாழ்கின்ற நரிக்குறவர்களுக்கும், கலைக்கூத்து கலைஞர்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்