வனத்துறைக்கு தண்ணி காட்டும் அரிசி ராஜா! தொடரும் தேடல்!

செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:42 IST)
கோவை அருகே காட்டுப்பகுதியில் தொடர்ந்து நாசத்தை விளைவித்து வரும் அரிசிராஜா யானையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருகிறது.

கோயம்புத்தூர் அருகே அர்த்தநாரிப்பாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் காட்டு யானை அரிசிராஜா, அடிக்கடி ஊர் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். கடந்த 3 மாத காலங்களில் அரிசிராஜாவின் அராஜகம் அதிகரித்துவிட்டதாக மக்கள் வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

அதன்படி ஆபரேஷன் அரிசிராஜா என்ற திட்டத்தின் படி அரிசிராஜாவை பிடித்து சின்னதம்பி யானையை போல் பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்தலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் வனத்துறை கண்ணில் மண்ணை தூவி தலைமறைவாக இருந்து வருகிறது அரிசிராஜா.

தொடர்ந்து அரிசிராஜாவை பிடிக்க ட்ரோன் கேமராக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்