எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்கவுள்ள வீரருக்கு நிதியுதவி!

Sinoj

சனி, 27 ஜனவரி 2024 (20:10 IST)
எவெரெஸ்ட் சிகரத்தை வருகிற ஏப்ரல் மாதம் ஏறி சாதனைப் படைக்கவுள்ள  திருலோகச்சந்திருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும்,  தடகள வீரர் சகோதரர் ரா.ராஜேஷுக்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.12 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்ல, தனித் திறமையுடன் சாதிக்க துடிப்போருக்கும் கழக அரசு என்றும் துணை நின்று வருகிறது.
அந்த வகையில், உலகிலேயே உயரமான எவெரெஸ்ட் சிகரத்தை வருகிற ஏப்ரல் மாதம் ஏறி சாதனைப் படைக்கவுள்ள சகோதரர் திருலோகச்சந்திரன் அவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், 
 
சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்கவுள்ள தங்கை பிரியதர்ஷினியின் போட்டி மற்றும் பயணச் செலவுகளுக்கென ரூ.55 ஆயிரத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினோம் ''என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ''இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். 
 
அதே போல, ஆண்கள் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் விளையாட்டுத்துறையில் சாதிக்க துணை நின்று வருகிறோம்.
 
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரர் சகோதரர் ரா.ராஜேஷ் அவர்களுக்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.12 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி வாழ்த்தினோம்'' என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்