இ-பாஸ் மீது மேலும் சில தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (12:39 IST)
இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.   
 
இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மக்கள் மாநிலங்களுக்கு இடையிலோ அல்லது மாவட்டங்களுக்கு இடையிலோ பயணிக்க மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.   
 
இந்நிலையில். இபாஸ் பெறுவதற்கான நடைமுறையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இபாஸ் வழங்கப்படும். 
 
அதோடு தமிழகத்திற்கு வந்த நாளிலிருந்து 3 நாட்களுக்குள் புறப்படுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது. தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள், திரைத்துறையினர், சட்டப் பணிகளுக்காக வருவோருக்கு இவை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்