ஃபானி புயலின் வேகம் எப்படி? பகீர் கிளப்பும் வானிலை மையம்

வியாழன், 25 ஏப்ரல் 2019 (18:24 IST)
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது.  
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் அந்தப் புயல் கரையைக் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும். மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த புயல் பெரும்பாலும் தமிழகத்தில் கரையை கடக்கும். 80% இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும். இந்த புயல் வேகமாக வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த புயல் பெரும்பாலும் 150 கிமீ வரை இருக்கும் என்று வானிலை மையும் கூறியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்